×

பெண் அரசு அதிகாரியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம்

நாகர்கோவில்: மனைவி, பிள்ளைகள் பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த பெண் அரசு அதிகாரியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பகுளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (41). வெல்டிங் தொழிலாளி. அவரது மனைவி சூர்யா (39). குமரி மாவட்ட புள்ளியியல் துறையில் அதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ரமேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு சூர்யா தனது கணவரை பிரிந்து மீனாட்சிபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். 2 பிள்ளைகளும் சூர்யாவுடனே வந்துவிட்டனர். இதனால் ரமேஷ் தனது தாயாருடன் தனியாக வசித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் தாயார், ரமேஷுக்கு காபி கொடுப்பதற்காக படுக்கையறை கதவை தட்டினார். ஆனால் ரமேஷிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் பதற்றமடைந்தவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறைக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் ரமேஷ் சடலமாக கிடந்ததை கண்டு தாயார் கதறி அழுதார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சூர்யா மற்றும் பிள்ளைகள் உடனே வந்தனர். அவர்கள் ரமேஷின் உடலை பார்த்து கதறி அழுதனர். மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து சென்றுவிட்டதால் விரக்தியில் இருந்த ரமேஷ் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் அரசு அதிகாரியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Ramesh ,Theppakulam ,Nagercoil Krishnankoil ,Surya ,Kumari District Statistics Department ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...